கொழும்பு துறைமுக நகர பொருளாதார வளைய விசேட ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிவில் அமைப்புகள் பல தாக்கல் செய்துள்ள விசேட மனுவுக்கு எதிராக தலையிட்டு, இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அனுமதி தருமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழு உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட அணிகள் பல இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட மனுவை ஆராயும் நடவடிக்கைகள் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஐவரைக்கொண்ட நீதாயத்தின் முன்னிலையில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்