SLFPயில் இணைகிறாரா விமல்..?






ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில், கடந்த 8 ஆம் தகதியன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.  


இதில், மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். அதன் பின்னரே மைத்திரிக்கும் விமலுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த 8ஆம் திகதியன்று நடைபெற்ற சந்திப்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகிய அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்