கடல்வழியாக சட்டவிரோதமாக வருபவர்களால் நாட்டுக்குள் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனைத் தடுப்பதற்காக 24 மணிநேரமும் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, மன்னார் தெற்கு கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே நாட்டுக்குள் நுழைந்த 11 இந்திய மீன்பிடிப் படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில். இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய கடல் பாதுகாப்பு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், குறித்த படகுகளில் வந்த 86 பேரையும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்