பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானுக்கு கொறோனா தொற்று

 




பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

தற்போது அவர் கொழும்பு சென்ட்ரல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இருந்த காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் நேற்றுமுன்தினம் அண்டிஜன் பரிசோதனை செய்துகொண்டதாகவும். அதன் முடிவு நெகடிவ் என்று இருந்தது என்றும் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.


தொடர்ந்து அவரது பதிவில் எனக்கு மீண்டும் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


ஆகவே கடந்த நாட்களில் என்னோடு நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் நான் விரைவில் பூரண சுகமடைவதற்கு உங்களுடைய பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுமாறும் மிகவும் அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்