கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட திடீர் மாற்றம்

 


பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதன்படி ,பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, தம்பே, படகெத்தர வடக்கு, கெஸ்பேவ தெற்கு, பெலென்வத்த கிழக்கு மற்றும் மேற்கு, மாகந்தன கிழக்கு, மாவித்தர வடக்கு, மடபாத மற்றும் மஹரகம பொலிஸ் அதிகாரப் பிரிவின் ஆருவ்வத்த வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


மேலும் ,எவ்வாறாயினும், பிலியந்தலை பொலிஸ் பிரிவில் முன்னதாக தனிமைப்படுத்தப்பட்ட கொரகாபிடிய, நாம்பமுனுவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் என இராணுவ தளபதி தெரிவித்தார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்