காசா மீதான தாக்குதல் தொடரும்...

 





காசா மீதான தாக்குதல் இன்னும் முடியவில்லை! இந்த தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இருதரப்பும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் இந்த தாக்குதல்களை தனிப்பதற்கு பல உலக நாடுகளும் முயற்சி செய்து வருகின்றனர்


இந்நிலையில், காசா மீதான தங்கள் தாக்குதல் இன்னும் முடியவில்லை என்றும் தேவை எவ்வளவு உள்ளதோ அதுவரை இந்த தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேலிய நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர் நெதன்யாகு....


எங்கள் நாட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் தான் இந்த மோதலுக்கான குற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர நாங்கள் அல்ல. காசாவில் உள்ள ஹமாஸ் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் மனநிலையிலேயே நாங்கள் இன்னும் உள்ளோம். காசா மீதான தாக்குதல் இன்னும் முடியவில்லை, பொதுமக்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு பொதுமக்களுக்கு வேண்டுமென்றே தீங்கு இளைக்கும் ஹமாஸ் போன்று இல்லாமல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அல்லது சிறிய அளவிலேயே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயங்கரவாதிகளை நேரடியாக தாக்குகிறோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்