இலங்கையிலும் உலகளவிலும் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உடன் பிறப்புக்களுக்கும் எனது பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
புனித ரமலான் மாதத்தின் நிறைவில் இந்த மகத்தான பெருநாளை நாம் கொண்டாடுகிறோம். நாட்டில் நிலவும் பெருந்தொற்றுக் காரணமாக கொண்டாட்டங்கள் எமது வீடுகளுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாம் நோன்பு நோற்றதன் மூலமாகவும், ஈகை செய்ததன் மூலமாகவும் தேவையுள்ள சக மனிதர்களை இந்த ரமலான் மாதத்தில் நினைவுகூற நமக்கு சந்தர்ப்பம் எட்டியது.
இந்த நாளிலும், அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, சிறைப்படுத்தப்பட்டுள்ள எமது முஸ்லிம் தலைவர்கள், புத்திஜீவிகள், சகோதரர்கள் ஆகியோரின் எதேச்சதிகாரமான கைதுகளுக்கு எதிராக எமது எதிர்ப்பை கருப்புக் கொடியொன்றை நம் வீட்டில் தொங்கவிடுவதன் மூலம் தெரிவிப்போம்.
நோன்புப் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும். இந்த இனிய நாள், இரக்கம், நன்றியுணர்வு மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றால் தனித்துவமாக இருக்கிறது.
மலரும் புனித பெருநாள் தினத்தன்று அநீதி ஒழிந்து நீதி செழித்த ஒரு திருநாட்டில் சகல இனங்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென பிராத்திக்கின்றேன்.
ஈத் முபாரக்!
சட்டத்தரணி SMM முஷாரப்,
பாராளுமன்ற உறுப்பினர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,
திகாமடுல்ல மாவட்டம்.

0 கருத்துகள்