இன்று (05.05.2021) பிற்பகல் 2.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஸ அவர்களிடம் பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமித்தல், தரமுயர்த்துதல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடி, நியாயப்பாடுகளை எழுத்து மூலமும் சமர்ப்பித்தோம். சாதகமான பதில்களே கிடைக்கப்பெறுகிறது.
இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் தலமையில் நடந்த இக் கலந்துறையிடலில் கலந்துகொண்டு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதல் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நண்பர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும், அவரது செயலாளர் சகோதரர் சிவராம் அவர்களுக்கும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், ரமேஸ் பாண்டியன் அவர்களுக்கும் நன்றிகள். விசமத்தனங்களைத் தாண்டி, பிரதேச செயலக தரமுயர்த்தலில் பேச்சுக்கு அப்பால் செயற்பாட்டிலும் எமது முயற்சி தொடரும் .....

0 கருத்துகள்