- மொஹமட் அன்ஸிர் -
முஸ்லிம் விவாக, விகாகரத்து சட்ட சீர்திருத்தத்தம் தொடர்பில், தான் அமைச்சரவையில் ஒரு பத்திரத்தை சமர்ப்பித்ததாக சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம்கள் 4 திருமணங்களை முடிக்கவுள்ள அனுமதியை ரத்துச் செய்ய வேண்டுமென்றோ, அல்லது காதி நீதிமன்ற முறையை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றோ எந்தவொரு பத்திரத்தையோ, சிபார்சுகளையோ அமைச்சரவையில் சமர்ப்பிக்கவில்லை என அடித்துக் கூறினார்.
அவர் இதுதொடர்பில், மேலும் குறிப்பிட்டதாவது.
முஸ்லிம் விவாக, விகாகரத்து சட்ட சீர்திருத்தத்தம் தொடர்பில், அமைச்சரவைக்கு நான் சில சீர்திருத்த ஆலோசனைகளை முன்வைத்தேன். அதில் முஸ்லிம் ஆண்கள் 4 திருமணங்களை செய்யவுள்ள உரிமை, காதி நீதிமன்ற முறை ரத்துச் செய்யப்பட வேண்டுமென்றோ நான் எதனையும் வலியுறுத்தவோ அல்லது சிபார்சுகளை முன்வைக்கவோ இல்லை.
எனினும் அமைச்சரவையானது, நான் முஸ்லிம் விவாக விகாகரத்து சட்ட சீர்திருத்தத்தம் தொடர்பில் ஆலோசனைகளை முன்வைத்தபோது, முஸ்லிம் ஆண்கள் 4 திருமணம் செய்வதற்கு இருந்த அனுமதி மற்றும் காதி நீதிமன்ற முறைமையையும் இரத்துச் செய்யப்பட வேண்டுமென தீர்மானித்து, அதன்படி அவை இரண்டையும் ரத்துச்செய்தது.
இதுவே அமைச்சரவையின் இடம்பெற்றது. இது அமைச்சரவையின் தீர்மானமாகும். இந்த தீர்மானத்தை அமைச்சரவை மாற்றிக்கொள்ளும் என்று நான் நம்பவில்லை.
அத்துடன் திருமண வயது 18, திருமணத்தில் மணப் பெண்ணும் கையொப்பமிடுதல் போன்ற 2 விடயங்களையும் அமைச்சரவை உள்ளீர்த்து தீர்மானங்களாக நிறைவேற்றி உள்ளதெனவும், நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்