எக்ஸ்பிரஸ் பேர்ள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி!


 எக்ஸ்பிரஸ் பேர்ள் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 48 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. 


இந்த உதவியின் மூலம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் 15,000 பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. 


பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் மூலம் குறித்த நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்