நாட்டின் மிருகக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை




நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சி சாலைகளிலுமுள்ள விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்தார்.


தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.


விலங்குகளுக்கு உரிய சிகிச்சை வழங்காவிடின், அவற்றின் உயிரை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.


அதற்கமைய, ரிதிகம சபாரி மற்றும் பின்னவல சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்