துமிந்த சில்வா பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.



இன்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 93 பேரில் துமிந்த சில்வாவும் அடங்குவதாக அவர் கூறினார்.

எனினும், துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான எந்தவொரு ஆவணமும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சிறைச்சாலை ஆணையாளர் கூறியிருந்தார்.

எனினும், துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்