(ஊடக சந்திப்பு - மக்கள் விடுதலை முன்னணி - 2021.06.29
பத்தரமுல்ல, மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில்)
குறுகிய காலத்திற்குள் மக்களின் வெறுப்பிற்கும் எதிர்ப்பிற்கும் இலக்காகிய அரசாங்கமாகவும் தலைவராகவும் இந்த அரசாங்கமும் சனாதிபதி கோட்டாபயவும் மாறிவிட்டார்கள். தாம் எதிர்நோக்குகின்ற அழுத்தங்களுக்கு எதிராக, தாம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்காக பல்வேறு சமூகக்குழுக்கள் இடையீடு செய்கின்றன. ஆனால் அரசாங்கம் சிலவேளைகளில் பொலீசாரைப் பிரயோகித்தும், சில வேளையில் குற்றப் பலனாய்வுத் திணைக்களத்தைப் பிரயோகித்தும், மேலும் சிலவேளைகளில் காடையர்கள் குழுவினரைப் பிரயோகித்தும் மக்களின் நியாயமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை அடக்கி வருகின்றது.
கடந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விடயங்கள் பற்றி எழுதுகின்றவர்களை மோப்பம்பிடித்துச்சென்று கைதுசெய்வதையும் தடுத்துவைப்பதையும் மேற்கொண்டார்கள். அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் பக்கத்திலிருந்து எதையாவது எழுத அல்லது கூற இடமளிக்காமல் அச்சுறுத்த முயற்சி செய்கிறார்கள். கடந்த காலம் பூராவிலும் அரசாங்கம் இத்தகைய பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. மறுபுறத்தில் பொலீசாரை ஈடுபடுத்தி ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல்களை நடாத்துகின்றது. முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற மீனவர்களின் நியாயமான ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடாத்தியது. பர்ள் கப்பல் தீப்பற்றியதால் மக்களின் ஒரே வாழ்வாதாரத்தை மீனவர்கள் இழந்தார்கள். அதைப்போலவே எண்ணெய் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆட்களை கடத்திச் செல்லவும் பொலீசாரைப் பிரயோகித்து தாக்குதல் நடாத்தவும் நடவடிக்கை எடுத்தார்கள். கல்வியை மிலிட்டரிமயப்படுத்தல் மற்றும் தனியார்மயப்படுத்தலுக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தை பொலீசாரை ஈடுபடுத்தி அடக்கினார்கள். அதைப்போலவே பல்வேறு விடயங்களை முன்வைக்கின்ற சமூகச் செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு பொலீசாரை ஈடுபடுத்தி கடத்திச்சென்ற விதத்தை நாங்கள் கண்டோம். அரசாங்கத்திற்கு எதிராக அவர்களின் மோசடிகள் - ஊழல்கள் மற்றும் குற்றச்செயல்களை அம்பலமாக்குகின்ற பெரும்பா

0 கருத்துகள்