அரசாங்கத்தால் அண்மையில் எரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானமானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றின் ஒரு பிரதான காரணியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கு ஒரு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களாக உலக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுதான்
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இப்போது 70 அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு என்பது தேசிய பொருளாதாரம், வங்கி வட்டி விகிதங்கள், வெளிநாட்டு இருப்புக்களை உறுதிப்படுத்தவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்த விலை உயர்வு என்பது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது திட்டத்தின் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்" என்று ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் பங்கேற்பில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழுவில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்