Breaking News எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளன.


ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஒக்டேன் 95  ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலைகளும் மேற்கண்டவாறு அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



இதற்கமைய எரிபொருட்களின் புதிய விலைகள் வருமாறு:



ஒக்டேன் 92 ரக பெற்றோல் - 157


ஒக்டேன் 95  ரக பெற்றோல் - 184


ஒட்டோ டீசல் - 111


சூப்பர் டீசல் - 144


மண்ணெண்ணெய் - 77

கருத்துரையிடுக

0 கருத்துகள்