20க்கு ஆதரவளித்தால் அமைச்சுப் பதவி தருவதாக அரசாங்கம் உறுதியளித்தது - அமைச்சுப் பதவி கிடைக்கும் என நம்புகிறேன் - அலி சப்ரி ரஹீம்

20ம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் இராஜாங்க அமைச்சுப் பதவி மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைமை பதவி ஆகியவற்றை தருவதாக அரசாங்கம் உறுதியளித்தது.




இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் நுழைந்தார். அவர் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. அதனால் தான் அரசுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.




மு.க மற்றும் அ.இ.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் மொத்தமாக 7 பேர் 20ம் திருத்தத்திற்கு வாக்களித்துள்ளோம். அவர்களுடன் அரசு செய்துள்ள ஒப்பந்தம் என்னவென எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு இராஜாங்க அமைச்சு தருவதாக தெரிவித்துள்ளார்கள்.








கருத்துரையிடுக

0 கருத்துகள்