ஒரே நாளில் 3 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

ADMIN
0

 

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 763 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.


இதற்கமைய ,நேற்று 3 இலட்சத்து 38 ஆயிரத்து 572 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாம் டோஸும் 35 ஆயிரத்து 410 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.


அதனையடுத்து , நாட்டில் இதுவரையில் 37 இலட்சத்து 64 ஆயிரத்து 750 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாம் டோஸும் 11 இலட்சத்து 83 ஆயிரத்து 391 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.


மேலும் ,நேற்று 3 ஆயிரத்து 365 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸும் 7 ஆயிரத்து 416 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின்முதலாவது டோஸும் செலுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default