ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதில் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமில் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி

ADMIN
0

இஸ்லாத்தின் இறுதிக்கடமையான புனித  ஹஜ்ஜை நிறைவேற்றிய திருப்தியில் யாத்திரிகர்கள் 'ஈதுல் அழ்ஹா' தியாகத்திருநாளை கொண்டாடும் இவ் வேளையில், உலகளாவிய முஸ்லிம் உம்மத்துடன் ஒன்றிணைந்து இலங்கை முஸ்லிம்களாகிய நாங்களும் இந்தத் திருநாளைச் சந்திக்கின்றோம்.


நபி இப்ராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தின் சிறப்பை வலியுறுத்தும் 'ஈதுல் அழ்ஹா' பெருநாளை வழமை போன்று பல்வேறு இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் முஸ்லிம்கள் இந்த நாளில் கொண்டாடுகின்றனர்.


உலகையும் எமது தாய்நாட்டையும் சூழ்ந்துள்ள கொடிய வைரஸ் நோயில் இருந்து விடுபட்டு சுபிட்சம் மலர புனித மிகு மாதத்தில் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.


ஏ.எம்.ஜெமில் 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதில் தேசிய அமைப்பாளர்,

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default