எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் த.தே.கூ - த.மு.கூ பங்கேற்பு!

ADMIN
0


ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட மேலும் சில கட்சிகளின் பங்குபற்றலுடன் எதிர்கட்சிகளின் அனைத்து கட்சி கூட்டம் இன்று கொழும்பில் இடம்பெற்றது.


இதற்கான ஏற்பாட்டை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்டிருந்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன் மற்றும் திகாம்பரம் உட்பட பல கட்சித் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். 


இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால அரசியல் பயணம் என்பன தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default