போதைக்கெதிராக வீதியில் இறங்கிய பிறைந்துரைச்சேனை பொதுமக்கள்

ADMIN
0

 


கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையில் அதிகரித்துள்ள போதை வியாபாரம், போதைப்பாவனையைக் கட்டுப்படுத்தக்கோரி பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்தைச்சேர்ந்த பொது மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தற்போது நடைபவணியாக வந்து வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்றத்தின் முன்னாலும் போதைக்கெதிராக பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஒரு சிலரின் நடவடிக்கையினால் முழுப்பிரதேசத்துக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருவதுடன், போதையைக் கட்டுப்படுத்துவதிலும் இல்லாதொழிப்பதிலும் பல்வேறு சவால்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் எதிர்கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


இதன் போது, போதை வியாபாரத்தில் ஈடுபடுவோர் மற்றும் அதனைப் பாவிப்போருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு போதைக் கட்டுப்படுத்துமாறு கோரி வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.


இவ்வார்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர்களும் கலந்து கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default