பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் புகழ்ந்து சமூக வலைகளில் எழுதிய நபர் கைது.




தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர்

 வேலுபிள்ளை பிரபாகரனைப் போற்றி சமூக ஊடகங்களில் பதிவுகளை எழுதியமைக்காக திருகோணமலையில் 24 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருகோணமலை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, கைது செய்யப்பட்ட நபர் இன்று (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்