சவூதி சட்டத்தை, பதுளை பஸ் தரிப்பிடத்தில் நிறைவேற்றுவேன் − வடிவேல் ஆவேசம்..!

 


சவூதி அரேபியா சட்டத்தை பதுளை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக தான் நிறைவேற்றுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிக் கோரி பதுளையில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


சவூதி அரேபியா சட்டத்தை இலங்கைக்கு கொண்டு வருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


சட்டத்தை நிறைவேற்ற முடியாது போனால், 

சந்தேக நபர்களை பதுளை பஸ் தரிப்பிடம் அல்லது ஊவா மாகாண சபைக்கு முன்பாக அழைத்து வந்து நிறுத்துமாறும், அவர்களுக்கு சவூதி அரேபியாவில் வழங்கும் தண்டனையை தாம் வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.


எந்தவொரு சிறுவர் தொழிலாளர்களையும் பணிக்கு அமர்த்த முடியாது என கூறிய அவர், அவ்வாறு சிறார்கள் பணிக்கு அமர்த்தப்பட்டால், பதுளை மக்கள் வீதிக்கு இறங்கி போராடுவதாகவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்