நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

 நாட்டில் இன்றைய தினம் *1,492* பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை *274,523* ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை *244,437* பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


*மேலும் 35 பேர் கொரோனாவுக்கு பலி*


நேற்றைய தினம் (10) நாட்டில் மேலும் *35* பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 


அதன்படி, 17 ஆண்களும் 18 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை *3,502* ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்