ஹஸ்பர் ஏ ஹலீம்_
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகப்பிரிவின் பத்தினிபுரம் "செளபாக்யா உற்பத்தி கிராமம்" வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (17) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது.
9.9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தின்கீழ் இக்கிராமம் நிலக்கடலை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவசியமான நீர்ப்பம்பிகள் மற்றும் நிலக்கடலை என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. கிராமத்தில் உள்ள குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பது, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்வது மற்றும் அப்பகுதி மக்களை தொழில்முனைவோராக மாற்றுவது இத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன
பாண்டிகோராள,பிரதேச அரசியல் தலைவர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன்,தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி, தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் ,சக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்