முஹம்மட் தம்பி முஹம்மட் றிம்ஸான்
நிந்தவூர் பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச செயலக எல்லைக்குற்பட்ட அட்டைப்பள்ளம் எனும் இயற்கை வளம் நிறைந்த ஓர் அழகிய கிராம புற கடற்கரையோரத்தில் புதிதாக முளைத்துள்ள உள்ளூர் சுற்றுலாத் தளம் குறித்தே இப்பதிவில் பார்க்கலாம்.
இவ்விடம் அன்மைக்காலமாக சமூக ஊடகங்கள் வாயிலாக கடற்கரை வட்டை, சிங்காரத்தோப்பு, ரொக் லேன்ட், நொச்சியடி, புள் பிட்டி வயலோரம், மாட்டுப்பளை கடற்கரை என்று பல பெயர் கொண்டு பரரவலாக பேசப்பட்டு வருகின்றது.
உண்மையில் இவ்விடமானது நிந்தவூர் அட்டைப்பள்ளம் நொச்சியடி முகத்துவாரம் மற்றும் பாளக்கட்டை கலப்பு ஆகியவற்றிற்கிடைப்பட்ட புள்பிட்டி வயலுக்கும் வங்கக் கடலுக்குமிடையேயான ஓர் நீண்ட பரப்பை கொண்ட கடற்கரையோரமாகும்.
இப்பிரதேசத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமாகவிருந்தால் ஏறத்தாழ 30 ஏக்கருக்கும் அதிகமான வேளான்மைக் கானிகள் மற்றும் தெண்ணந் தோப்புக்களை கடல் காவு கொண்ட பின்னரே இப் பகுதி இவ்வாறான தோற்றம் பெற்றிருக்கின்றது.
இப்பகுதியில் கடற்கரையோரம் நொச்சியடி தொடக்கம் பாளக்கட்டை வரைக்குமாக கடற்கரையோடை என்றளைக்கப்பட்ட வாய்க்கால் மூலமாகவே இப்பகுதி விவசாயக் கானிகளுக்கான நீர்ப்பாசன வசதிகள் இலகுவாக மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதியில் பிரதானமாக மீன் பிடி மற்றும் விவசாயம் போன்ற தொழில் துறைகள் அதிகளவாக காணப்பட்டிருந்த போதிலும் கடலரிப்பின் பின்னர் இத் தொழிற்துறைகள் விரைவாக பாதிப்படைந்துள்ளது.
இயற்கையின் சீற்றத்தால் உருவான இப்பகுதியானது இனிமையான கடலலைகளின் ஓசையுடன், இயற்கை வனப்பின் நடுவே ரீங்கார இசையும், இதமான காற்றும், வாஞ்சையோடு வரவேற்கும் கருமேகக் கூட்டங்களும் மிகுந்த மன ஆறுதலைத் தருகின்றதென்றால் மிகையாகாது.
இப்பகுதியானது புகைப்படத்துறையில் ஆர்வமுள்ளர்களுக்கு அவர்களின் கலைத்திறனை விருத்தி செய்ய ஒரு உந்து சக்தியாகவும் காணப்படுவதை யாராலும் மறுக்க முடியாது.
இந்நவீன யுகத்தில் மனிதன் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பாரிய சவால்களை கடினமாக எதிர்கொண்டு சிறிது நிம்மதியை தேடி அமைதியான வயல் வெளி, கடற்கறை, இயற்கை வனப்பு ஆகியவற்றை தேடியலைந்து சென்று கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் அனைத்தையும் ஒரே இடத்தில் இயற்கையாக உருவாக்கியிருக்கின்றான் இறைவன். அல்ஹம்துலில்லாஹ்
உலகமே எதிர்கொண்டிருக்கும் கொடிய கொரோனா நோயின் கோறதாண்டவத்தினால் வீடுகளுக்குள் முடங்கி கிடந்த எம்வர்கள் நிம்மதியை தேடியலைந்து இங்கு வந்து அழகிய இயற்கையில் தஞ்சமடைந்து கொள்கின்றார்கள்.
சமூக ஊடகங்களும், முகநூல் பாவனையாளர்களும் இவ்விடத்தை உள்ளூர் சுற்றுழாத்தளமாக மாற்றிவிடலாமென பல பதிவுகளை சமூகவளைத்தலங்களில் பதிவு செய்து வருவது வரவேற்கத்தக்கது.
இருந்தாலும் இப்பகுதி இயற்கையாக பசுமை நிறைந்து அழகிய தோற்றத்தில் மனதிற்கினிமையாக காட்சியளிக்கின்றதென்பதை அறிந்த பொது மக்கள், புகைப்படக் கலைஞர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் குடும்போத்தோடு இங்கு வந்து அலவலாவிக் கொள்கின்றார்கள்.
கடந்த ஒரு வாரமாக எமது அவதானத்தில் இங்கு நாளுக்கு நாள் மக்களின் வருகை அதிகரிப்பதையும், இயற்கையாக உருவாகிய இவ்விடம் இங்கு வருகின்றவர்களின் அசமந்த போக்கினால் கழிவுகள் அதிகரிப்பதையும், அழகாக காட்சியளிக்கும் பட்ட மரங்களுக்கு விளைவிக்கப்படும் சேதங்கள் அதிகரிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்விடயம் இயற்கை பிரியர்களுக்கு மனவேதனையளிக்கின்றது.
எனவே தயவு செய்து இங்கு வருகின்றவர்கள் குறித்த இப்பகுதிக்குள் கழிவுகளை வீசாமலும் இயற்கைக்கு குந்தகம் விளைவிக்காமலும் இவ்விடத்தினை நாம் அனைவரும் பேனிப் பாதுகாத்திடுவோமாக...

0 கருத்துகள்