ராகமை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களது சடலங்களை விரைவாக தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மரணித்தோரின் உறவினர்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
ராகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள 26 சடலங்களை மஹர, வத்தளை, பியகம, ஜா-எல, கட்டான மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ள மயானங்களில் தகனம் செய்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரையில் 5 ஆயிரத்து 17 பேர் கொவிட்-19 காரணமாக மரணித்தனர்.
கடந்த 2 நாட்களில் மாத்திரம் 196 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்