சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பாரிய இழப்பாகும்.


பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகவும் நீதி வேண்டி, அயராது பாடுபட்ட சிறந்த சட்டத்தரணி இவர்.


அன்னார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனினதும், அவரது குடும்பத்தினரதும் பல்வேறு வழக்குகளை முன்னின்று நடாத்தி வந்த தலைசிறந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஆவார்.


சட்டத்துறையில் பல நுணுக்கங்களை திறம்பட வெளிப்படுத்திய சட்டத்தரணி கௌரி தவராசாவின் மறைவுக்கு, எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

கருத்துரையிடுக

0 கருத்துகள்