புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை நீக்கினார் அமைச்சர் வாசுதேவ


அமீன் எம் றிழான்


புதிய நீர் இணைப்புகளை வழங்கும்போது உரிமை கோரப்படாத நிலங்களுக்கான அறவிடப்படும் கட்டணத்தை நீக்கினார் அமைச்சர் வாசுதே நாணயக்கார


அரசினால் வழங்கப்பட்டுள்ள காணிகளில் குடியிருப்போருக்கு புதிய நீர் இணைப்புகளை வழங்கும்போது அந்தக் காணிகளுக்கான உரிமை இன்மை காரணமாக நீர் இணைப்பு கட்டணத்துக்கு மேலதிகமான ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.


பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்படும் பத்திரத்தில் உரிமையின்றி குடியிருப்பவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்களில் இருந்து இந்த மேலதிக கட்டணம் அறவிடப்படுகின்றது.


இது தொடர்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களினால் நீர் வழங்கள் அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு புதிய நீர் இணைப்புக்களை வழங்கும்போது உரிமை இன்றி குடியிருப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் 1500 ரூபாய் மேலதிக கட்டணத்தை நீக்குவதற்கு நீர் வழங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளார்.


இந்த மேலதிக கட்டணத்தை நீக்கும் சுற்றுநிருபத்தை இன்றைய தினம் (ஆகஸ்ட் 23) முதல் செயற்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு அமைச்சர் ஆலோசனை வ ழங்கியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்