கொவிட் தரவுகளில் பிழை?

 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தவறான தரவுகள் வெளியிடப்படுவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.


இதன்படி ,சுகாதார அமைச்சு தவறான தரவுகளை வெளியிடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் மறுத்த நிலையிலேயே, இதனைக் கூறியுள்ளார்.


தொழில்நுட்பம் மற்றும் கால இடைவெளியில் ஏற்படுகின்ற தாமதம் காரணமாக, சிலர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.


மேலும் ,சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்