அமரர் மங்கள சமரவீர ஜனநாயகப் புருஷராக திகழ்ந்தவர்!
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஜனநாயக புருஷராகத் திகழ்ந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மங்கள சமரவீரவின் மறைவு குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளமை, நாட்டின் அபாய நிலைமையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகத்தில் மிகச்சிறந்த நம்பிக்கையுள்ள ஒரு அரசியல்வாதியை நாடு இழந்துமிருக்கிறது.
ஏகாதிபத்தியவாதிகளைத் தோற்கடிப்பதில் அமரர் மங்கள அளப்பரிய சேவையாற்றியவர். சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளை, கடும்போக்கு சக்திகளால் தீர்க்க முடியாதென்பதில் அவருக்கு அளப்பரிய நம்பிக்கை இருந்தது.
வடபுல முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவதில் அவருக்கிருந்த கனவில் பெரும் பகுதியை நனவாக்கிய பெருந்தகையும் அவர்தான்.
நாட்டின் பெரும்பான்மைவாதம், சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வது போன்றுதான், வடக்கின் பெரும்பான்மைச் சிந்தாந்தம், அங்குள்ள சிறுபான்மையை ஒடுக்குவதாகவும் அவர் கருதினார். இதனால்தான், ஜனநாயகம் தழைத்தோங்க அமரர் மங்கள பாடுபட்டதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுதாபம் தெரிவித்துள்ளது.
-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

0 கருத்துகள்