எந்த விமர்சனங்கள் வந்தாலும் கொவிட் தொற்றுநோயைத் தடுக்க சுகாதாரத் துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒரு குழுவாக பணியாற்றினால் இந்த சவாலை சமாளிப்பது கடினமான காரியமாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி தேசிய மருத்துவமனையின் கொவிட் சிகிச்சை பிரிவிற்காக கண்டி முஸ்லீம் சமூகம் நேற்று (17) 2.5 மில்லியன் ரூபாய் தொகையை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வழங்கியது.
இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விமர்சனங்களுக்கான சிறந்த பதில் வெற்றியாகும் என அவர் தெரிவித்தார்
