2021 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் பெறும்
எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள 2,997 பில்லியன் ரூபா கடன் எல்லையை 400 பில்லியன் ரூபாவினால் அதிகரித்து 3,397 பில்லியன் ரூபாவாக திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
மேலும், குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்