மதுபானக் கடைகளை திறக்க வேண்டாம் என இலங்கை மருத்துவர் சங்கம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
நிலவுகின்ற கடினமான நேரத்தில் மதுபான கடைகள் திறக்கப்படுவதால் ஆரோக்கியம், சமூக மற்றும் பொருளாதாரத்தில் பிரச்சினைகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டத்தை மீறி மக்கள் மது விற்பனை நிலையங்களில் கூடுவதால் கொரோனா தொற்று பரவக்கூடிய ஆபத்து காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
தங்களிடம் இருக்கும் சிறு தொகை பணத்தையும் மதுவுக்கு செலவழிப்பதால் குடும்ப வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சாலை விபத்துக்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டனர்.

0 கருத்துகள்