
கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. ஏற்கெனவே மைனாரிட்டி அரசை நடத்தும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கடந்த இரு ஆண்டுகளில் கனடாவில் நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும்.
நாடாளுமன்றத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் ஆயுள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் மூன்றாவது முறையாக ட்ரூடோ பிரதமராகப் பொறுப்பேற்பார்.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் 170 இடங்களைப் பிடித்தால் ஆட்சியமைக்க முடியும். கடந்த தேர்தலில் ட்ரூடோவின் கட்சிக்கு 155 இடங்கள் கிடைத்தன.
0 கருத்துகள்