எம்மை துரத்தியடிக்க நடவடிக்கை எடுத்தால் இறுதியாக அரசாங்கம் வீழ்ச்சி காணும்.

(ஆர்.யசி)


இலங்கையில் எரிவாயு உற்பத்தியை மேற்கொள்ள அமெரிக்க

 நிறுவனமொன்றுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், நிதி அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் வலுசக்தி அமைச்சராக நான் ஒருபோதும் கைச்சாத்திட மாட்டேன் எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


பங்காளிக்கட்சிகள் அரசாங்கத்தில் இருக்கும் நாய் போன்று செயற்பட்டுக்கொண்டுள்ளோம், அரசாங்கத்தின் மீதும், நாட்டின் மீதும் அச்சுறுத்தல் உள்ளதை கருத்தில் கொண்டு குறிக்கின்றோம். ஆனால் ஆபத்தை அறியாது எம்மை துரத்தியடிக்க நடவடிக்கை எடுத்தால் இறுதியாக அரசாங்கம் வீழ்ச்சி காணும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


வலுசக்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்