இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா தொற்றின் தன்மை குறித்து ஆய்வு செய்துவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் ஆபத்தானது இல்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இதன்படி ,ஐசிஎம்ஆர் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பரவி வரும் ஏ.ஒய்.4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா குறித்து ஐ.சி.எம்.ஆர். மற்றும் எம்.சி.டி.வி. ஆய்வு மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 10 பேருக்கு மட்டும் புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா, பிரிட்டனில் அதிகம் பரவி வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வருவோரிடம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள் விஞ்ஞானிகள்.
0 கருத்துகள்