18 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து சிறார்களுக்கும் நாளை தொடக்கம் நாடு முழுவதும் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி ,கொழும்பு மாவட்டத்தில் இந்த வயதெல்லையை சேர்ந்தவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகின்றது.
கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் தடுப்பு பிரிவு ஆகியன இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
மேலும் ,தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 கருத்துகள்