வீடொன்றில் 20 மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது.


அனலைதீவில் வீடொன்றில் 20 மஞ்சள் மூடைகள் பதுக்கி

 வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


அதனை பதுக்கி வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்தக் கைது நடவடிக்கை இன்று (01) அதிகாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை குறிப்பிட்டது.


நாவற்குழி மற்றும் அனலைதீவைச் ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள் மூடைகள் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்