ஆசிரியா் தொழிற்சங்கம் அரசாங்கத்துக்கு மீண்டும் எச்சரிக்கை!


எதிர்வரும் நாட்களில் அதிபர் , ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும்,  21 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு முடிவை அறிவிக்காவிட்டால் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் எங்களின் மாற்று தீர்மானத்தை அறிவிக்க நேரிடும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.


கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டாா். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஒரு கட்டம் கீழிறங்கி வந்துள்ளோம். சுபோதினி அறிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகவுமுள்ளது. அந்த அறிக்கையை அமுல்படுத்த வேண்டுமாயின்  71 பில்லியன்  ரூபா நிதி தேவைப்படும். ஆனால், 30 பில்லியன்   ரூபா நிதி வழங்க வேண்டும் என அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துமாறே கோருகிறோம்.  அதேபோன்று, அந்த தொகையை சுபோதினி அறிக்கையின் ஒரு பகுதியாக வழங்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. இதுதொடர்பில் பலதடவைகள் தெளிவுபடுத்தியுள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினாா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்