வெளிப் பிரதேசங்களிலிருந்து நுவரெலியா வருவோரை உடனடியாக திருப்பி அனுப்புமாறு காவல்துறைக்கு பணிப்புரை.

வெளிப் பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு வருகை

தருவோரை உடனடியாகத் திருப்பி அனுப்புமாறு காவல்துறைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மாவட்டச் செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.




இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.




நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு வீதம் என்பன தற்போது குறைவடைந்து வருகின்றன.




இந்நிலையில், பிற மாகாணங்களிலிருந்து நுவரெலியாவிற்கு வருபவர்கள் ஊடாக மீண்டும் கொவிட் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.




இதனைத் தடுக்கும் முகமாகவே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்