மைத்ரி தலைமையில் சுதந்திரக்கட்சி அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறசேனவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த அதிகாரத்தை கைவிட்ட ஒரேயோரு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எனவும், அவ்வாறான ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்து மீண்டும் பலவீனமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அதற்காக பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு தேவையான நிலையான கொள்கையோடு புதிய வேலைத்திட்டத்தை வகுத்து அதன்படி பயணிக்க வேண்டியது அவசியம் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்