நாட்டில் சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் காலம் தாழ்த்தி ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கல்வியாண்டுக்குள் பாடங்களை கற்றுக் கொடுக்க விசேடதிட்டங்களை கல்வி அமைச்சு வகுத்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்தவிடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாற்று வழிகளைப் பயன்படுத்தி விடுபட்ட பாடங்களை கற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் விடுபட்ட பாடங்களைக் கற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை திறந்தும், வேறுமாற்று வழிகளைப் பயன்படுத்தியும் விடுபட்ட பாடங்களை கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது – என்றார்.
0 கருத்துகள்