முதன் முறையாக இன்று கூடும் ஞானசார தேரர் தலைமையிலான 'ஒரு நாடு - ஒரே சட்டம்'செயலணி...


கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் “ஒரு நாடு - ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று முதன் முறையாக கூடவுள்ளது.


இதன்படி ,13 உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி செயலணி கடந்த 27ஆம் திகதி நியமிக்கப்பட்டது.


இன்றைய கலந்துரையாடலின் பின்னர் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்ப்பார்ப்பதாக செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.


மேலும் ,இலங்கையில் "ஒரு நாடு - ஒரே சட்டம்" நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டமூலங்களை ஆய்வு செய்து வரைவு செய்யும் பணியை இந்த செயலணி கொண்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்