இம்மாதத்துடன் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்




தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.



இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னிலைப் பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்