முன்னாள் ரக்பி வீரரும், பயிற்றுவிப்பாளரும் ரக்பி மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சந்திரஷான் பெரேரா இன்று (24) பிற்பகல் காலமானார்.
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் ஊடக முகாமையாளரும் தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான சந்திரஷான் பெரேரா, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
