தீர்வுக்காக எந்த உச்சத்தையும் தொட தயாா் – அதிபா், ஆசிரியா் சங்கங்கள் கொழும்பில் போராட்டம்

தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி அதிபா், ஆசியர்களின் தொழிற்சங்கங்கள் நாடு பூராகவும் இன்று (06)  மாபெரும் ஆரப்பாட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில், கொழும்பிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்துக்கு அருகில் ஒன்றுக்கூடிய ஆதிபா்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்கள் காலை 10 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தன.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை ஆசிாியா் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,


உடனடியாக ஆசிரியர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதிபர்கள் ஆசிாியா்களின் பிறசிக்கைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுப்போம்.


தீர்வுகளை கட்டங்கட்டமாக பிரிப்பதற்குப் பதிலாக ஒரு தீர்வை முறையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடலை முன்னெடுக்குமாறே அரசாங்கத்தைக் கோருகிறோம். ஆனால், எந்தவொரு கலந்துரையாடலையும் முன்னெடுக்காமல் இந்த அரசாங்கம் காலத்தைக் கடத்தி வருகின்றது என்று சுட்டிக்காட்டினாா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்