தென் மாகாணம் உற்பட நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.


தென் மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கான மின் விநியோகமானது இன்று திடீரென தடைப்பட்டுள்ளது.


கொழும்பு, காலி, பிலியந்தல, பாணந்துறை, ஹொரணை, எம்பிலிப்பிட்டிய, வத்தளை மற்றும் தெஹிவளை உட்பட இலங்கையின் பல பகுதிகளே இவ்வாறு திடீர் மின்வெட்டுக்கு முகங்கொடுத்துள்ளது.


திடீர் மின் வெட்டுக்கான காரணம் என்னவென்று உறுதியாக தெரியவில்லை.


இந் நிலையில் செலிழழந்த மின்சார கட்டமைப்பினை மீட்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை விரைந்து முன்னெடுத்து வருகிறது.


இதேவேளை நாட்டின் பல பகுதிகளுக்கு கன மழை, இடி - மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கையினையும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்