16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை




நாளைய தினம் (29), மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் மற்றும் வடமாகாணத்தில் 4 மாவட்டங்கள் தவிர, மன்னார் உட்பட ஏனைய 16 மாவட்டங்களுக்கும் சிவப்பு அபாய எச்சரிக்கையை திணைக்களம் விடுத்துள்ளது.

கடும் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்