எதிர்காலத்தில் தனிக்கட்சியாக ஆட்சியைக் கைப்பற்றுவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளதோடு, நாட்டின் பிரதான இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கப்போவதில்லை எனவும் கூறினார்.
புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பிரதான இரு கட்சிகளுக்கு வாக்களித்து வந்தது போதும் என்கிற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்துப் பார்ப்போம் என்கிற எண்ணம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வந்துள்ளது என்றார்.
நாட்டின் தற்போதைய மோசமான நிலைக்கு நாட்டை ஆட்சி செய்து வந்த இரு கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும். எனவே இந்த பிரதான இரு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைக்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
0 கருத்துகள்