கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 24 பேருக்கு தொற்று


காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.  மற்றும் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனையின்போது 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளா் வைத்தியா் ஷேல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.


அந்த வைத்தியசாலையின் வெளிநோயாளா் பிரிவில் நேற்று முன்தினம் 399 ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  


அந்த பரிசோதனைகளில் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 92 பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையிலும் 12 பேருக்கு தொற்று உறதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியஙசாலையின் பணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.


மேலும், 24 மணிநேரத்தில் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.


இந்நிலையில், 24 மணிநேரத்தில் இந்த வைத்தியசாலைக்கு புதிதாக 20 கொரோனா நோயாளர்கள் சிகிச்சைக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 62 கொரோனா நோயாளர்கள் இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்